search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் குவியும் நோயாளிகள்
    X

    அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் குவியும் நோயாளிகள்

    • மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.
    • சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல், சளி காய்ச்சல் அதிக அளவில் பொது மக்களை தாக்கி வருகிறது.

    சேலம்:

    நடப்பாண்டில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல், சளி காய்ச்சல் அதிக அளவில் பொது மக்களை தாக்கி வருகிறது.

    நிரம்பி வழியும் கூட்டம்

    இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்தி ரிகளில் காய்ச்சல் பாதித்தவர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சேலம் அரசு தலைமை ஆஸ்பத்தி ரிக்கு வழக்கமாக வெளி நோயாளிகளாக 10 முதல் 20 பேர் காய்ச்சல் சிகிச்சைக்கு வருவார்கள். ஆனால் தற்போது இது தினசரி 150 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரி வெளி நோயாளிகள் பிரிவில் நீண்ட வரிசையில் காத்து நின்று நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    மேலும் உள்நோயா ளிகளாக காய்ச்சல் சிறப்பு வார்டில் 30 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதில் 2 பேர் டெங்கு காய்ச்சலாலும், 2 பேர் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களும் அடங்குவர், இதே போல புறநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் 20-க்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    கை, கால் , தலை வலி

    தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகு பவர்களுக்கு கை, கால் வலி, தலை வலி, குளிர், இருமல், சோர்வு என பல்வேறு பாதிப்புகள் ஒரே நேரத்தில் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் பாதித்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகி றார்கள். எனவே காய்ச்சலை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.

    ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் காய்ச்சல் கட்டுக்குள் வரும் என சுகாதாரத்துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.

    எச்சரிக்கை

    மேலும் வரும் நாட்களில் மழை அதிகம் பெய்யும் போது காய்ச்சல் அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் குளிர்ந்த உணவுகளை தவிர்த்து சூடான உணவுகளை சாப்பிடு வதுடன், தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.

    Next Story
    ×