என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டி பூச்சி மருந்து குடித்து தற்கொலை
- கடந்த 1 மாத காலமாக சரியாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் குப்ப கவுண்டன் வளவு பகுதியை சேர்ந்தவர் பெரமச்சி இவருடைய மனைவி குள்ளம்மாள் (80) இவர் கடந்த 5 வருடமாக ஆஸ்துமா மற்றும் டிபி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 1 மாத காலமாக சரியாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மகன் கந்தசாமி மற்றும் உறவினர்கள் குள்ளம்மாளை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
Next Story






