search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெறிநாய்கள் தொடர் அட்டூழியம் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்றதால் விவசாயிகள் அச்சம்
    X

    எடப்பாடி அடுத்த மேல் சித்தூர் பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் பலியான ஆடுகள்.

    வெறிநாய்கள் தொடர் அட்டூழியம் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்றதால் விவசாயிகள் அச்சம்

    • அண்மை காலமாக தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொல்லும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
    • நல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை அவரது தோட்டத்தில் கட்டி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்திற்குள் நுழைந்த வெறி நாய்கள், அங்கு கட்டிருந்த 8 ஆடுகளை கடித்து குதறி கொன்றது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மை காலமாக தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொல்லும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி, மேல்சித்தூர் பகுதியை சேர்ந்த பாலன் மனைவி நல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை அவரது தோட்டத்தில் கட்டி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்திற்குள் நுழைந்த வெறி நாய்கள், அங்கு கட்டிருந்த 8 ஆடுகளை கடித்து குதறி கொன்றது. மேலும் சில ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த பழனியம்மாள் குடும்பத்தினர் ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வருவாய் துறை மற்றும் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை துறையினர். உயிரிழந்த 8 ஆடுகளை அப்புறப்படுத்தி, காயம் அடைந்த ஆடுகளுக்கு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×