என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள்.
ஏற்காட்டில் வனத்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- ஏற்காட்டில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியை வனச்சரக அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை வனச்சரக அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார். இதில் 80-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள், வனவர்கள் தமிழரசன், சஞ்சய், சக்திவேல், காவல் துறையினர் சார்பில் துணை ஆய்வாளர் சபாபதி மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்காடு அரசு பள்ளியில் தொடங்கிய பேரணி, சூழல் சுற்றுலா பூங்கா, படகு இல்லம் வழியாக ஒண்டிக்கடை ரவுண்டானா வரை சென்று மீண்டும் சூழல் சுற்றுலா பூங்காவில் நிறைவடைந்தது. அப்போது, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியவாறும் மாணவர்கள் சென்றனர்.






