என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாட்டையொட்டிசேலத்தில் 19-ந் தேதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

- முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலத்தில் நடக்கிறது.
- தி.மு.க. அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மாநில இளைஞரணி மாநாட்டிற்கு முன்னோட் டமாக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலத்தில் நடக்கிறது.
இதனை சிறப்பாக நடத்திட வேண்டி வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் மத்திய மாவட்ட, மாநகர, நிர்வாகிகள் பகுதி, ஒன்றியங்களுக்கு நேரில் வந்து அந்தந்த பகுதி ஒன்றியங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளோம்,
அதன்படி 14-ந் தேதி காலை 9.30 மணி பொன்னம்மாப்பேட்டை பகுதி, 10.30 மணி அரிசிபாளையம் பகுதி, 11.30 மணி அம்மாப்பேட்டை பகுதி, 12.30 கிச்சிப்பாளையம் பகுதி, மதியம் 1.30 மணி குகை பகுதி, 4.30 தாதகாப்பட்டி பகுதி, 5.30 மணி கொண்டலாம்பட்டி பகுதி, 6.30 மணி செவ்வாய்ப்பேட்டை பகுதி, 7.30 மணி குமாரசாமிப்பட்டி பகுதியிலும் நடக்கிறது.
15-ந் தேதி 9.30 மணி அஸ்தம்பட்டி பகுதி, 10.30 அழகாபுரம் பகுதி, 11.30 மணி மெய்யனூர் பகுதி, 12.30 மணி சூரமங்கலம் பகுதி, 1 மணி சேலம் வடக்கு ஒன்றியம், 3 மணி தாரமங்கலம் கிழக்கு மற்றும் ஓமலூர் தெற்கு ஒன்றியம், 4 மணி ஓமலூர் வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றியம், 5 மணி காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
இதில் தி.மு.க. அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
