என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீவட்டிப்பட்டி அருகே மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்பு
- தீவட்டிப்பட்டி அடுத்த மோர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.
- இவருடைய விவசாய கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் காடையாம்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த மோர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய விவசாய கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் காடையாம்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பிணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரது மனைவி மாரி (75) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






