என் மலர்
உள்ளூர் செய்திகள்

பருத்தி, தேங்காய் கொப்பரை ஏலம்
- தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பருத்தி மற்றும் தேங்காய் கொப்பரை விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்றது.
எடப்பாடி - நெடுங்குளம் பிரதான சாலையில், வெள்ளரி வெள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பருத்தி மற்றும் தேங்காய் கொப்பரை விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்றது. இப்போது ஏலத்தில்112 மூட்டை பருத்தி விற்பனையானது. பொது ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூபாய் 5,000 முதல் 7,109 வரை விற்பனையானது. இதேபோல் பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.7,631 முதல் ரூ.7900 வரையிலும், இரண்டாம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.5,825 முதல் ரூ.6731 வரை விலை போனது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான வணிகம் நடைபெற்றது.
Next Story






