என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகப்பு விளக்கு எரியவிட்டபடி சாலைகளில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.
ஆத்தூர் பகுதியில் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி
- தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் பல்வேறு இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
- சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளிலும் சில நாட்களாக கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது.
ஆத்தூர்:
தமிழகம் முழுவதும் வளிமண்டல கீழெடுத்து சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் பல்வேறு இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
ஆத்தூர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளிலும் சில நாட்களாக கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் இன்று அதிகாலை முதலே ஆத்தூர் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, கொத்தாம்பாடி, செல்லியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் லேசான பனி பொழிவு ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் மஞ்சள் நிற முகப்பு விளக்கு எரிய விட்டபடி சென்றனர். இன்னிலையில் அதிகாலை முதலே பனி பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.






