என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான கணவன், மனைவி
உறவினர் திருமணத்திற்கு சென்ற கணவன்-மனைவி பலி
- மோகன்ராஜ் (60). இவரது மனைவி விமலா ராணி. இவர்கள் உறவினர் திருமணத்திற்காக ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி தனியார் திருமண மண்டபத்திற்கு எெலக்ட்ரிக் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தனர்.
- அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் சென்ற தனியார் பஸ், அவர்கள் வந்த ஸ்கூட்டி மீது மோதியது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (60). இவரது மனைவி விமலா ராணி. இவர்கள் உறவினர் திருமணத்திற்காக ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி தனியார் திருமண மண்டபத்திற்கு எெலக்ட்ரிக் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் கொத்தம்பாடி பகுதியில் மண்டபத்தின் எதிரே வாகனத்தை திருப்பினர். அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் சென்ற தனியார் பஸ், அவர்கள் வந்த ஸ்கூட்டி மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் பஸ்சின் அடியில் சிக்கி தலை சிதறி பரிதாபமாக சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அந்த பகுதி கிராம மக்கள் இப்பகுதியில் தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கு பல்வேறு முறை கோரிக்கைகள் வைத்தும், சாலை மறியல் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து ஆத்தூர் ஆர்.டி.ஓ. ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நெடுஞ்சா லைத்துறை மூலம் பேச்சு வார்த்தை நடத்தி மேம்பாலம் அமைக்கவும், தடுப்புகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட் டனர். சுமார் 2 மணி நேரத் திற்கு பின்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.






