என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கோட்டத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    சேலம் கோட்டத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • சேலம் கோட்டம் சார்பில் சுபமுகூர்த்தத்தையொட்டி பல்வேறு வழித்தடங்களில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 10-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சேலம்:

    சேலம் கோட்டம் சார்பில் சுபமுகூர்த்தத்தையொட்டி பல்வேறு வழித்தடங்களில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 10-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சேலம் புறநகர் பெங்க ளூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திரு வண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து தடம் நீட்டிப்பு வழித்தட பஸ்கள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படுகின்றன.

    இது தவிர பயணியர் வசதிக்கு அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம் வழியாகவும் முன்பதிவு நடக்கிறது. இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூர், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல்லில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூர் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரி சலை தவிர்க்கலாம் என்று அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×