search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு சின்னம், தேசிய கொடியுடன் காரில் வலம் வந்து கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
    X

    அரசு சின்னம், தேசிய கொடியுடன் காரில் வலம் வந்து கைதான 2 பேர் சிறையில் அடைப்பு

    • ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோபால்சாமி (45), இவர் இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • காரில் சேர்மன் ஆப் இந்தியாக எம்.எஸ்.எம்.இ. நேசனல் புரமோசன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோபால்சாமி (45), இவர் இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன் (60 )என்பவர் பழக்கமானார். அவர் சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் அனைத்து இந்திய தலைவர் எனக்கூறி வ்ந்தார். அவர் பயன்படுத்திய காரில் சேர்மன் ஆப் இந்தியாக எம்.எஸ்.எம்.இ. நேசனல் புரமோசன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அவரிடம் கோபால்சாமி பேசிய போது அந்த அமைப்பின் தமிழக கவுன்சில் சேர்மன் பதவி வாங்கி தருவதாக கூறினார். அதற்கு 3.50 கோடி கேட்டார். கடந்த 10-ந் தேதி 50 லட்சம் ரூபாயுடன் சேலம், திருவாக்க வுண்டனூர் பைபாஸ் வர அறிவு றுத்தினார். அங்கு சென்ற கோபால் சாமி ரூ.31 லட்சம் ரூபாயை கொடுத்தார்.

    அதனை வாங்கிய முத்துராமன் உடன் இருந்த பஞ்சாப் மாநிலத்ைத சேர்ந்த துஷ்யந்த் (34 )என்பவரிடம் கொடுத்தார். தொடர்ந்து முத்துராமன் வங்கி கணக்கில் 19 லட்சத்தை கோபால் சாமி அனுப்பினார். பணத்தை பெற்ற அவர் பதவியை பெற்று தரவில்லை.

    இதனால் கோபால்சாமி கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது 9 லட்சத்தை கொடுத்து விட்டு மீதி 41 லட்சத்தை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக கூறி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

    இதற்கிைடயே சேலத்தில் உள்ள ஓரு ஓட்டலில் எம்.எஸ்.எம்.இ. ப்ரோமோசன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி ஒரு கூட்டம் நடந்தது. இதில் முத்துராமன், துஷ்யந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது முத்துராமன் 3-ம் வகுப்பு வரை படித்திருப்பதும், பொதுப்பணித்துறை காண்டிராக்டரான அவர் டெல்லி சென்ற போது துஷ்யந்துடன் பழக்கம் ஏற்பட்டதும் இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த அமைப்பை தொடங்கி மதுரையில் ஏற்கனவே கூட்டத்தை நடத்தி உள்ள நிலையில், தற்போது சேலத்தில் 2-வது கூட்டத்தை நடத்தி கடன் பெற்று தருவதாக கூறி ஏமாற்றியதும் தெரிய வந்தது.

    கைது

    இதையடுத்து முத்துராமன் , துஷ்யந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது தேசிய கொடியை பயன்படுத்தியது, அரசு எம்பளத்தை பயன்படுத்தியது, கடன் வாங்கி தருவதாக ஏமாற்ற முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் பயன்படுத்திய தேசிய கொடி கட்டிய காரையும் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே கைதான முத்துராமன் மற்றம் துஷ்யந்த் ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரம் இது போல வேறு யாரையும் ஏமாற்றினார்களா ? என்பது குறித்தும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×