என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
சேலம் ஜங்ஷனில் ரெயில் மறியலுக்கு முயன்ற 130 பேர் கைது
- மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
- ஜங்சன் பிரதான சாலையில் இருந்து ரெயில் நிலையம் முகப்பு பகுதி வரை ஊர்வலமாக சென்றனர்.
சேலம்:
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில்இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, அதன்படி திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஜங்சன் பிரதான சாலையில் இருந்து ரெயில் நிலையம் முகப்பு பகுதி வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட முயற்சி செய்த 130 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் ரெயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






