search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மார்க்கெட்டுகளில் 1 கிலோ பீன்ஸ் 100 ரூபாய்க்கு விற்பனை
    X

    சேலம் மார்க்கெட்டுகளில் 1 கிலோ பீன்ஸ் 100 ரூபாய்க்கு விற்பனை

    • கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
    • 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.

    மேலும் ஆந்திரா, பெங்களூரு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் உழவர் சந்தைகள் மற்றும் திருமணிமுத்தாறு ஆற்றோரம், வ.உ.சி, பால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை சற்று உயர்ந்துள்ளது.

    தக்காளி கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்கிறது. கேரட் கிலோ ரூ.40, பீன்ஸ் ரூ.100, அவரை ரூ.50, உருளை ரூ.56, பாகற்காய் ரூ.35, கத்தரி ரூ. 24, வெண்டைக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.50 முதல் ரூ.80 வரை, சுரக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.20, மாங்காய் கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×