என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

2 வயது மகளை விஷம் கொடுத்துக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை- சேலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

- சேலம் இரும்பாலை அருகே தாய் தனது 2 வயது மகளை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் சேலம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
- இதில் அந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
சேலம்:
சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மனைவி கோமதி (வயது 28) இவர்களுக்கு மகாலட்சுமி (3), கவுசிகா ஸ்ரீ (2) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் ஆண் குழந்தைகளே இல்லை என்று சந்திரசேகர் மனைவி கோமதியிடம் அடிக்கடி தகராறு ெசய்து வந்தார்.
அதனால் கோபித்துக்கொண்டு கோமதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் குழந்தைகளுக்கு குருணை மருந்தை கொடுத்து தானும் அதனை குடித்தார். இதில் இரண்டு வயதுக் குழந்தை கௌசிகா ஸ்ரீ உயிரிழந்தார். கோமதி மற்றும் மகாலட்சுமி ஆகிய 2 பேரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து கோமதியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சேலம் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற கோமதிக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.