search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் பல்கலைக்கழகத்தில்  தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை
    X

    தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் நூல்கள் விற்பனையை துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்தார்.

    தமிழ் பல்கலைக்கழகத்தில் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை

    • சித்தி ரைத் திருநாளையொட்டி 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
    • அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்பல்க லைக்கழ கத்தில் சித்தி ரைத் திருநாளையொட்டி 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விற்பனையை துணை வேந்தா் திருவள்ளுவன் தொடக்கி வைத்து பேசியதாவது:-

    தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் மட்டுமின்றி, தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞா்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் என பலவகை நூல்களையும் ஆழமாகப் பதிவு செய்து, அவற்றை நூலாக வெளியிடும் அரும் பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறை மேற்கொண்டு வருகிறது.

    நிகழாண்டு சித்திரை திருநாளையொட்டி, 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இவ்விழாவில் பல்க லைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) தியாகராஜன், ஆட்சிக் குழு உறுப்பினா் நீலகண்டன், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) கோவைமணி, பதிப்புத் துறை இயக்குநா் (பொறுப்பு) பன்னீா்செல்வம், மக்கள் தொடா்பு அலுவலா் (பொறுப்பு) முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×