என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வயிற்றுவலி, கைவிரல் வீக்கத்தால் அவதி : காங்கிரஸ் நிர்வாகி-மாணவி சிகிச்சைக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உதவி
  X

  வயிற்றுவலி, கைவிரல் வீக்கத்தால் அவதி : காங்கிரஸ் நிர்வாகி-மாணவி சிகிச்சைக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உதவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காங்கிரஸ் நிர்வாகியான இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
  • நாங்குநேரி அருகே உள்ள சோமநாதபேரி கிராமத்தை சேர்ந்த சினேதா என்ற மாணவிக்கு இடது கைவிரலில் வீக்கம் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தார்.

  நெல்லை:

  களக்காடு சிங்கிகுளம் அருகே உள்ள வடுவூர் பட்டியை சேர்ந்தவர் காமராஜ்.

  காங்கிரஸ் நிர்வாகியான இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனை யில் அவருக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஏற்பாடுகள் செய்தார்.

  அதன்தொடர்ச்சியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமராஜூக்கு குடல் வால்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் அங்கே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

  நாங்குநேரி அருகே உள்ள சோமநாதபேரி கிராமத்தை சேர்ந்த சினேதா என்ற மாணவிக்கு இடது கைவிரலில் வீக்கம் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தார். இதையறிந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மாணவி சினேதாவுக்கும் நெல்லை பன்னோக்கு மருத்துவமனை யில் உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகள் செய்தார்.

  அதன்படி சினேதாவுக்கு இடது கைவிரலில் வீக்கம் ஏற்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

  தற்போது சினேதா, காமராஜ் இருவரும் நலமோடு உள்ளனர். அவர்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

  மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

  Next Story
  ×