search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.600 தினசரி ஊதியம் வழங்க வேண்டும்- கலெக்டரிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள்.

    100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.600 தினசரி ஊதியம் வழங்க வேண்டும்- கலெக்டரிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை

    • ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கி ரூ. 10 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்திட வேண்டும் என்று கோஷமிட்டனர்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட குழு சார்பில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். முன்னதாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பெருமாள், மாவட்ட தலைவர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மோகன் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார்.

    அப்போது வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கி ரூ. 10 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்திட வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவசாய தொழிலாளிகளுக்கு கூலியை உயர்த்திட வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 200 நாள் வேலை, நாள் ஒன்றுக்கு ரூ. 600 ஊதியம் உள்ளிட்டவை வழங்க வேண்டும், தனை நகர்புறத்திலும் விரிவாக்கம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

    மேலும் கல்வி, சுகாதாரத் துறை உள்ளிட்டவற்றை தனியார்களிடம் ஒப் படைக்க கூடாது எனவும், கிராமங்களில் கூடுதலான சுகாதார மையங்கள் உருவாக்கிட வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    பின்னர் கலெக்டரிடம் மனு அளித்து சென்றனர். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி அளித்த மனுவில், நெல்லை மாநகர பகுதியில் கந்துவட்டி கொடுமை மற்றும் சாதிய வன்கொடுமை அதிகரித்து வருவதாகவும், உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து கந்து வட்டியை முற்றிலுமாக ஒழித்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    Next Story
    ×