search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரூ.200 கோடி மதிப்பில் தூத்துக்குடி துறைமுகம்- கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடக்கம் - துறைமுக ஆணைய தலைவர் பேட்டி
    X

    தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் பேட்டியளித்த காட்சி.

    ரூ.200 கோடி மதிப்பில் தூத்துக்குடி துறைமுகம்- கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடக்கம் - துறைமுக ஆணைய தலைவர் பேட்டி

    • தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் ராமச் சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • தூத்துக்குடி துறைமுக சாலை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலையாக ரூ. 200 கோடி மதிப்பில் மாற்றும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் ராமச் சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வ.உ.சி. துறைமுகத்தில் கடந்த நிதி ஆண்டில் 38.04 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, முந்தைய ஆண்டை விட 11.5 சதவீதம் கூடுதலாக செயலாற்றி உள்ளது. கப்பல் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயித்த இலக்கினை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    2022-23-ம் நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ. 816.17 கோடி வளர்ச்சி பெற்று நிகர உபரி வருவாய் ரூ.256.14 கோடி பெற்றுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறன் பன் மடங்கு அதிகரித்து ள்ளது.

    2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 36.81 லட்சம் சரக்குகளை கையாண்டு உள்நாட்டு சரக்குகளை விட அதிகமாக கையாண்டு சாதனை படைத்துள்ளது. ரூ. 16 கோடியில் நிலக்கரி சேமிப்பு கிடங்குகள் மேம்படுத்துதல், ரூ. 42 கோடியில் சரக்கு பெட்ட கங்களை கண்கா ணிக்க வசதி ஏற்படுத்துதல்.

    ரூ. 18.8 கோடியில் தீயணைப்பான் வசதியை நவீனமாக்குதல். ரூ. 70 லட்சம் செலவில் 140 கிலோவாட் மேற்கூரை சூரியமின் ஆலை அமைத்தல். ரூ. 2.22 கோடி செலவில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய 6 இ-கார்கள் 100 சதவீத எல்.இ.டி. ஒளி விளக்குகள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் ரூ. 434.17 கோடி செலவில் 9-வது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துறைமுக நுழை வாயில் அகலப்படுத்தும் பணி, உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் சேமிப்பு கிடங்கு தொடங்குவதற்காக சுமார் 54 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்கி உள்ளது. மேலும் கூடுதலாக சிமெண்ட் கையாளும் முனையம் அமைப்பதற்கு 12.79 ஏக்கர் ஒதுக்கி உள்ளது. ரூ. 7ஆயிரத்து 55 கோடி மதிப்பில் வெளி துறைமுக வளர்ச்சி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    பசுமை துறைமுகம்

    துறைமுகத்தை ஹைட்ரஜன் முனையமாக மாற்றுவத ற்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்து ள்ளது. இந்த திட்டம் விரை வில் செயல்படுத்தப்பட்டு 2 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகம் பசுமை ஹை ட்ரஜன், பசுமை அமோ னியா, பசுமை ஏத்தனால் துறைமுகமாக மாற்றும் பணி ரூ. 26 கோடி செலவில் 2 காற்றாலை மின் திட்டம், ரூ. 16 கோடியில் 5 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த பணிகள் அடுத்த மாதம் முடிவடையும் அதன் பின் துறைமுகம் பசுமை துறைமுகமாக உருவாகும். மேலும் 60 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி திட்ட ங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

    இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து

    தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் போக்கு வரத்து தொடங்குவதற்காக துறைமுகம் தயாராக உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக நடுக்கடலில் 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி அமைக்கும் திட்டங்கள் ரூ. 700 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

    துறைமுக சாலை முதல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலையாக ரூ. 200 கோடி மதிப்பில் மாற்றும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது துறைமுக போக்குவரத்து மேலாளர் பிரபாகர், நிதி ஆலோசகர் சாகு, துணை மருத்துவ அதிகாரி ராஜேஸ்வரி, மெக்கா னிக்கல் என்ஜி னீயர் சுரேஷ் பாபு, துணைக் காப்பாளர் பிரவீன் குமார் சிங், மக்கள் தொடர்பு அதி காரி சசி குமார், உதவி அலுவலர் முருகன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×