search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கி வாசலில் விவசாயியிடம் நூதன முறையில் ரூ.5 லட்சம் கொள்ளை
    X

    துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    வங்கி வாசலில் விவசாயியிடம் நூதன முறையில் ரூ.5 லட்சம் கொள்ளை

    • மரங்களை வெட்டி காகித ஆலைக்கு அனுப்பியதற்கான தொகை ரூ. 5 லட்சம் அமலநாதனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
    • மர்ம நபர் ஒருவர் கீழே தங்கள் பணம் நூறு ரூபாய் கிடப்பதாக கூறி கவனத்தை திசைதிருப்பி பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் நடுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி அமல–நாதன் (வயது 62). இவருக்கு வல்லம்-சென்னம்பட்டி சாலையில் தோப்பு உள்ளது. அங்கு ஆர்.எஸ்.பி. மரம் வளர்த்து அந்த மரங்களை வெட்டி தமிழ்நாடு காகித நூல் ஆலைக்கு அமலநாதன் அனுப்பி தொழில் செய்து வந்துள்ளார். அவ்வாறு மரங்களை வெட்டி காகித ஆலைக்கு அனுப்பியதற்கான தொகை ரூ. 5 லட்சம் அமலநாதனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    அந்த பணத்தை எடுப்பதற்காக வல்லம் பஸ் நிலையம் அருகே வங்கிக்குசென்று ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துவிட்டு பணப்பையை தனது சைக்கிளில் மாட்டிவிட்டு கிளம்ப உள்ள நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் கீழே தங்கள் பணம் நூறு ரூபாய் பணம் கிடப்பதாக கூறி கவனத்தை திசைதிருப்பி கண்ணிமைக்கும் நேர த்தில் சைக்கிளில் மாட்டி யிருந்த பணப்பையை எடுத்து க்கொண்டு வேகமாக தப்பியுள்ளார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு நபர் கொள்ளை–யடித்து வந்த–வரை மோட்டார் சை க்கிளில் ஏற்றிச்சென்றதாக தெரி–கிறது. நடந்த சம்பவத்தை வங்கி வாசலில் நின்று கொண்டி–ருந்த வாடிக்கையாளர்களிடம்– கூறி மர்ம ஆசாமிகளை தேடியுள்ளனர். ஆனால், அதற்குள் அவர்கள் தப்பி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ் பெக்டர் முத்துக் குமார் மற்றும் போலீசார் வங்கிக்கு நேரில் வந்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் வங்கி உள்புறம், நுழைவு‌ வாயில் மற்றும்‌ சுற்றியுள்ள‌ பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்கா–ணிப்பு கேமராவில் பதிவாகி‌ உள்ள‌ காட்சி–களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இது குறித்து அமலநாதன் கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த வங்கி முன்பு ஏராளமான மக்கள் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×