என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு காந்தி வேடமிட்ட சிறுவன் விழிப்புணர்வு.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- வாகன ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தஞ்சாவூர்:
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் நகர போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் தஞ்சாவூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பழைய பஸ் நிலையம் வழியாக வந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள்,
பொதுமக்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் தேசப்பிதா காந்தியடிகள் போல வேடமணிந்த அரசுப்பள்ளி மாணவன் சிவநாசிக்வரன் தலைமை யில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர் .
வாகனம் இயக்கும் போது வாகனத்துக்கும் ஓட்டுனருக்கும் முறை யான ஆவணங்கள் கைவசம் இருக்குமாறு பார்த்து க்கொள்வேன்.
இருசக்கர வாகனம் இயக்கு ம்போது ஹெல்மெட்டும் நான்கு சக்கர வாகனம் இயக்கும்போது சீட்பெ ல்ட்டும் அணிய வேண்டும்.
பஸ் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன். போதையில் வாகனம் இயக்க மாட்டேன்.
சாலை விதிகளை பின்பற்றுவேன் என்று வாகன ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா , நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறை குறிக்கும் புத்தகத்தையும் காந்திக்கு பிடித்த உணவான நிலக்கட லையும் காந்தி ஜெயந்தி பரிசாக வழங்கினார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வை யாளர் கல்யாணசுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திரு ந்தனர்.






