search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு
    X

    பள்ளத்ைத சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

    சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு

    • தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால், மழையால் அந்த இடம் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.
    • சுவாமிமலை மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி வாகனம் பின்புற டயர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

    சுவாமிமலை:

    திருவைகாவூர் கொள்ளி டம் ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்காக சுவாமிமலை வழியாக வேதாரண்யம் வரை குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

    இதற்கான பணிகள் ஒரு சில இடங்களில் முடிவு பெற்ற நிலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால், மழையால் அந்த இடம் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.

    இந்நிலையில், கும்பகோணம்- திருவை யாறு சாலையில் சுவாமிமலை மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி வாகனம் பின்புறடயர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

    சுமார் 2 மணி நேரம் போராடி அந்த வாகனத்தை மீட்டனர்.

    இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    அதனை தொடர்ந்து அங்கு வந்த கனரக லாரி ஒன்றும் மாட்டிக் கொண்டது.

    இதனால் சாலையில் பள்ளம் பெரிய பள்ளமாக மாறி உள்ளது.

    இதனை அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், துணைத்தலைவர் சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்தனர்.

    போர்க்கால அடிப்படையில் நடைபெற்ற இப்பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    Next Story
    ×