search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை சரிசெய்ய கோரி ஏற்காடு மலை கிராம மக்கள் பள்ளி குழந்தைகளுடன் சாலை மறியல்
    X

    பள்ளிகுழந்தைகளுடன் சாலைமறியலில் ஈடுபட்ட பெற்றோர்.

    சாலையை சரிசெய்ய கோரி ஏற்காடு மலை கிராம மக்கள் பள்ளி குழந்தைகளுடன் சாலை மறியல்

    • தலைச்சோலை கிராமம் சாலையை சரிசெய்ய கோரி மலை கிராம மக்கள் பள்ளி குழந்தைகளுடன் மறியலில் ஈடுப்பட்டனர்.
    • ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தலைச்சோலை கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்து வாகனம் செல்ல முடியாத அளவுக்கு இருந்தது.

    இந்நிலையில் கோடை விழாவிற்காக சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது சாலை முழுவதுமாக போடப்படாமல் ஒரு சில இடங்களில் மட்டும் ஜல்லி கொட்டப்பட்டு அப்படியே விடப்பட்டது.

    இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காலை தலைச்சாலை கிராமத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவர் தனது மகள்கள் இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு அந்த சாலை வழியே வந்தார். அப்பொழுது அங்கு கொட்டப்பட்டு இருந்த ஜல்லியில் வாகனம் செல்ல முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது மகள்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பள்ளி குழந்தைகளுடன் கொட்டசேடு வழியாக குப்பனூர் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஏற்காடு போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஒரு வாரத்தில் இந்த சாலை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×