search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரையோர மக்கள் மேடான பகுதிக்கு  செல்ல வருவாய்த்துறை எச்சரிக்கை
    X

    கரையோர மக்கள் மேடான பகுதிக்கு செல்ல வருவாய்த்துறை எச்சரிக்கை

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வருவாய்துறையினர் தடை விதித்து எச்சரிக்கை விடுத்து உள்ளது.
    • மேலும் எச்சரிக்கை பலகைகள் அமைத்தும், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் கன மழை பெய்து வருவதன் காரணமாக அங்கு உள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வருவாய்துறையினர் தடை விதித்து எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    அதன்படி, பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி, மாரப்பம்பாளையம், ஜமீன்எளம் பள்ளி, அரசம்பாளையம், ஜேடர்பாளையம் தடுப்பணை, ஜேடர்பா ளையம் பரிசல் துறை, வடகரையாத்தூர், கண்டிபாளையம் பரிசல் துறை, ஆனங்கூர், அய்யம்பாளையம் பரிசல்துறை, பிலிக்கல் பாளையம் பரிசல் துறை, கொந்தளம், வெங்கரை, பொத்தனூர், பரமத்தி வேலூர், பாலப்பட்டி, மோகனூர் வரையிலான காவிரி கரையோர பகுதி பொதுமக்கள், ஆடு, மாடுகளை காவிரி ஆற்றில் குளிப்பாட்டவும், மீன் பிடிக்கவும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக பரமத்தி வேலூர் தாசில்தார் சிவகுமார் மற்றும் மோகனூர் தாசில்தார் ஜானகி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் காவிரி கரை யோரம் குடி இருக்கும் பொது மக்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்றும், காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கு மாறும் தெரிவித்துள்ளனர். மேலும் எச்சரிக்கை பலகைகள் அமைத்தும், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும் பரமத்தி வேலூர் வருவாய்த் துறை மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×