search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நஞ்சராயன்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
    X

    கோப்புபடம்

    நஞ்சராயன்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

    • தலா 9நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர் உட்பட 41 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.
    • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 15வது மாநாடு திருப்பூரில் நடந்தது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 15வது மாநாடு திருப்பூரில் நடந்தது.நொய்யல் பண்பாட்டு அமைப்பின் தலைவர் ஜீவானந்தம் பறையிசை அடித்து துவக்கி வைத்தார். சங்க கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் ஏற்றி வைத்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் மாநாட்டை துவக்கி வைத்தார்.

    மாவட்ட தலைவர் கணேசன் கலை இலக்கிய அறிக்கையை முன் வைத்தார். பண்பாட்டு அறிக்கையை மாநில குழு உறுப்பினர் கோவை சதாசிவம், செயல் அறிக்கையை மாவட்ட செயலாளர் குமார், வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன் வைத்தனர். தொடர்ந்து தலா 9நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர் உட்பட 41 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.இதில் திருப்பூரில், திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும். கணியாம்பூண்டி முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் அகழாய்வு பணியை துவக்க வேண்டும்.

    திருமுருகன்பூண்டியில் சிற்பத்தொழில் நடக்கும் பகுதியில் சிற்பக்கலை பயிற்சி கல்வி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும்.கொடுமணல் அகழாய்வு நடந்த இடத்தில் கிடைத்த தொல்பொருட்களை ஈரோடு, சென்னிமலை, காங்கயம் ஆகிய 3 இடங்களில் ஏதேனும், ஒரு பொருத்தமான இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×