search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வெல்லத்தை கபிலர்மலை பகுதி ஆலைகளிலிருந்து வாங்க கோரிக்கை
    X

    கபிலர்மலை பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வெல்லத்தை கபிலர்மலை பகுதி ஆலைகளிலிருந்து வாங்க கோரிக்கை

    • தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, அண்ணாநகர், கபிலக்குறிச்சி, பிலிக்கல் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பொன்மலர் பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், அய்யம்பாளை யம், வடகரையாத்தூர், தண்ணீர் பந்தல், சோழசிராமணி, மாரப்பம்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆலைகளில் கரும்புகளை இயந்திரம் மூலம் சாரு பிழிந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச்சர்க்கரை என தயாரிக்கின்றனர்.

    தயாரிக்கப்பட்ட வெல்லம் சிப்பங்கள் உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க் கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் இதை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட் டங்கள், பல்வேறு மாநிலங்களுக்கும் அனு ப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,150-க்கும் விற்பனையானது. இந்த வாரம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,270-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,280-க்கும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதி களில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×