என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த ரேஷன்கடையை படத்தில் காணலாம். (உள்படம்). இடிந்த நிலையில் காணப்படும் மேற்கூரை.
பாவூர்சத்திரத்தில் பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை
- ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பகுதி காங்கீரிட் தளம் சேதமடைந்த நிலையில் விரிசல்களுடன் காணப்படுகிறது.
- மழைநீர் உள்ளே சென்று ரேசன் பொருட்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரம் காமராஜ் நகர், வென்னிமலை முருகன் கோவில் செல்லும் சாலையில் ஒரு ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, ஆயில், சீனி, மண்எண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பகுதி காங்கீரிட் தளம் சேதமடைந்த நிலையில் விரிசல்களுடன் காணப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் மழைநீர் கசிவுகள் உள்ளே சென்று ரேசன் பொருட்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
மேலும் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மேற்கூரை இடிந்து தங்கள் மேல் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் பணிபுரிந்து வருவதாக கூறுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.






