search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பிக்கும் பணி - எம்.எல்.ஏ ஆய்வு
    X

    ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பித்து கட்டுவது தொடர்பாக ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பிக்கும் பணி - எம்.எல்.ஏ ஆய்வு

    • மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் அங்கு வரும் நோயாளிகளும், பணியாளர்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர்.
    • கட்டிடத்தை புதுப்பித்து கட்டுவது தொடர்பாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் அங்கு வரும் நோயாளிகளும் அங்குள்ள பணியாளர்களும்மிகுந்த இன்னலுக்கு உள்ளா கின்ற னர்.எனவே பழுதடைந்த அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென ஷா நவாஸ் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் பேசியிருந்தார். இந்நிலை யில், அதை புதுப்பித்து கட்டுவது தொடர்பாக, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார். புதிய கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகா ரிகளிடம் வலியுறுத்தினார்.

    Next Story
    ×