search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி- அமைச்சர் வழங்கினார்
    X

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் நிவாரண உதவிகள் வழங்கினார்.

    வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி- அமைச்சர் வழங்கினார்

    • கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தாழ்வான பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர்.
    • தண்ணீரின் வேகத்தால் கிராமம் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தடுப்புச் சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக வெளியே ற்றப்பட்ட வெள்ளநீர் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவை எட்டியதால் வெள்ளநீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடந்த 6 நாட்களாக கடலில் கலந்து வருகிறது.

    இதனால் ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்ப்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தாழ்வான பகுதி மக்கள் நிவாரண முகாம்களிலும் தஞ்சம் அடைந்திருந்தனர்.

    இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக செய்யப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முதல் தண்ணீரின் அளவு குறைந்ததால் நிவாரண முகங்களிலிருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    குடும்பம் ஒன்றுக்கு போர்வை, கைலி, துண்டு மற்றும் தலா ரூ.500 பணம் உள்ளிட்ட நிவாரண தொகுப்பை தனது சொந்த நிதியிலிருந்து 826 குடும்பங்களுக்கு வழங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் விரைவில் அந்தந்த கிராமத்திற்கு அருகே புயல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் எனவும் தண்ணீரின் வேகத்தால் கிராமம் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தடுப்புச் சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

    அடுத்த கிராமத்திற்கு சென்ற அமைச்சரின் காரை வழியில் நிறுத்திய நாதல்படுகை வடக்கு தெரு மக்கள் தங்கள் பகுதியையும் நேரில் பார்வையிட கோரிக்கை விடுத்தனர்.

    அதனை ஏற்று காரில் இருந்து இறங்கிய அமைச்சர் நடந்து சென்று பாதிப்புகளை பார்வையிட்டதுடன் அவர்களின் கோரிக்கை குறித்து கனிவுடன் கேட்டறிந்தார்.

    அமைச்சரின் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், திமுக மாவட்ட பொறுப்பாளரான நிவேதா.எம்.முருகன் எம்.எல்.ஏ, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சியர் செந்தில்குமார், கொள்ளிடம் ஒற்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் செல்ல சேது ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன் உடனிருந்தனர்.

    Next Story
    ×