என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாவட்டத்தில்  வேலை நிறுத்த  போராட்டத்தை தவிர்த்த  ரேஷன் ஊழியர்கள்
    X

    கோவை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை தவிர்த்த ரேஷன் ஊழியர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில், எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
    • தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

    கோவை,

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நிதி செலவானதால், அரசு ஊழியர்களுக்கு 2020-ல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

    2021-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 11 சதவீதம் அகவிலைப் படி உயர்வு வழங்கியது. மீண்டும் ஜூலை மாதம், 3 சதவீதம் அக விலைப்படி உயர்வை அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை, 17 சதவீதத்தில் இருந்து, 31 சதவீதமாக அரசு உயர்த்தி உத்தரவிட்டது.

    ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு, இந்த அகவிலைப்படியை வழங்கவில்லை.இதனால் தங்களுக்கும் அக விலைப்படி உயர்வு கேட்டு, ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

    இந்தநிலையில் அகவிலைப்படியை உயர்த்தக்கோரி, ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று முதல், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கோவையில் ரேஷன் கடை ஊழியர்கள் யாரும், இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

    இதனால் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில், எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளத்தை, பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×