என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டாசு வெடித்து மாணவன் காயம்
- பட்டாசு துகள்களை தீ வைக்க முயன்ற போது விபரீதம்
- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
காவேரிப்பாக்கம்:
நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் நரேஷ் (வயது 13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று மதியம் வெடிக்காத பட்டாசு துகள்களை ஒன்று சேர்த்து தீ வைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு துகள்கள் பலமாக வெடித்து முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






