என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு
- சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- 6-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது
நெமிலி:
நெமிலி அடுத்த பள்ளூர் பழைய காலனி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. விவசாயி. இவரது மனைவி கஸ்தூரி. தம்பதியின் மகன் சச்சின் (வயது 6). இவர் காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் சச்சினுக்கு கடந்த 6 -ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெமிலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக மாணவன் அங்கிருந்து மாற்றப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் மாணவனுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.