என் மலர்
உள்ளூர் செய்திகள்

இடி, மின்னலுடன் பலத்த மழை
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மொத்த மழையின் அளவு 359.1 மி.மீ.,
- விடிய விடிய கொட்டி தீர்த்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் நேற்று நள்ளிரவிலிருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து இன்று காலையிலும் மழைதூறல் பெய்த வண்ணம் உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை விபரம்:-
ராணிப்பேட்டையில் 67.8.மி.மீ., பாலாறு அணைக்கட்டு 14.8 மி.மீ., வாலாஜாவில் 42.5 மி.மீ., அம்மூரில் 41 மி.மீ., ஆற்காட்டில் 92.6.மி.மீ., மின்னலில் 8.4 மி.மீ., காவேரிப்பாக்கத்தில் 43 மி.மீ., பனப்பாக்கத்தில் 2.8 மி.மீ., கலவையில் 46.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 359.1 மி.மீ., மாவட்ட சராசரி 32.6 5மி.மீ.ஆகும்.
Next Story






