என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் மூழ்கிய வாலிபர் உடலை தீயணைப்பு படையினர் மீட்ட காட்சி.
கிணற்றில் மூழ்கி தச்சு தொழிலாளி பலி
- நீச்சல் பழக சென்றபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 23), தச்சு தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் அரக்கோணம் அடுத்த அம்மனூர் தேவதானம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகச் சென்றார்.
அப்போது திடீரென தாமோதரன் நீரில் மூழ்கினார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அந்த பகுதி மக்கள் கிணற்றில் குதித்து தாமோதரனை தேடினர்.
இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தாமோதரனை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் தாமோதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






