என் மலர்
உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டைமாவட்டம் நெமிலியில் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அங் கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் ராதா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 10 குழந்
தைகளுக்கு குறைவாக இருக் கும் மையங்களை மினிமைய மாக்குவதையும், 5 குழந்தைக ளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை பிரதான மையத் தோடு இணைப்பதைகைவிட வேண்டும், 10 ஆண்டுகள் பணி செய்த உதவியாளர்க ளுக்கு எவ்வித நிபந்தனை யின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் சிலிண்டர் பில்லில் உள்ள படி முழு தொகையையும் வழங்க வேண்டும், நிலுவை யில் உள்ள பஸ் கட்டணம், மைய வாடகை, கூடுதல் பொறுப்பு தொகை உடனடி யாக வழங்க வேண்டும், அங் கன்வாடி ஊழியர், உதவியா ளர்கள் அனைவருக்கும் மே மாதம் முழுவதும் சம்பளத்து டன்கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் மாவட்ட சி.ஐ.டி.யு. தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் ஞானமுருகன், சங்கநிர்வாகிகள் விமலா, ரேவதி, லோகம்மாள் உள்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.