என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
- குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள்
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த டோல்கேட் அருகே கடந்த 16-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 2 கார்களில் 4 டன் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வர்ஷிராம் (25) , பிருஷா(22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி பரிந்துரையின் பேரில் கலெக்டர் வளர்மதி,
குட்கா கடத்தலில் ஈடுபட்ட வர்ஷிராம், பிருஷா ஆகிய 2பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
Next Story






