என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்படுவதையும், கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா வில் உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில் உள்ளது. 3ஆயிரம் ஆண்டு கள் பழமையான கோவிலில் உள்ள வெயில் உகந்த விநாயகரை ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் வழியில் பூஜித்து சென்றதாக ராமாயண புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உப்பு வெயில் உகந்த விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவானது கடந்த 5-ந்தேதி அன்று முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. கடந்த 8-ந்தேதி 6-ம் கால யாகபூஜை தொடங்கி நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9.45 மணிக்கு மகா பூர்ணகுதி நடைபெற்று 10.45 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 11.20மணிக்கு ராஜகோபுரம், விமானம் மற்றும் உப சன்னதிகளின் கலசங்களிலும் ஒரே நேரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு விநாயகருக்கு சித்தி புத்தி ஆகிய தெய்வங்களுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி வீதி உலாவை தொடர்ந்து உலக நன்மைக் காக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாதாரனையும் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம், ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






