என் மலர்
உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனங்கள் மோதல்; வாலிபர் பலி-2 பேர் காயம்
- சாயல்குடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
- விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகரை சேர்ந்த ராமர் மகன் வீரமுத்து (வயது 22). இவரும் இரு வேலி கிராமத்தைச் சேர்ந்த மொயின்கான் என்பவரும் மூக்கையூர் கிராமத்தில் இருந்து சாயல்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்ேபாது சாயல்குடியில் இருந்து மூக்கையூர் நோக்கி சென்று கொண்டிருந்த தெற்கு மூக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் உமையராஜ் (18) ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வீரமுத்து கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த உமையராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்பட்டார்.
காயமடைந்த மொயின்கான் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சால்மன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






