search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனித உயிரை காவு வாங்க காத்திருக்கும் தெளிச்சாத்தநல்லூர் பாலம்
    X

    சேதமடைந்து காணப்படும் பாலம்.

    மனித உயிரை காவு வாங்க காத்திருக்கும் தெளிச்சாத்தநல்லூர் பாலம்

    • பரமக்குடி தெளிச்சாத்தநல்லூர் பாலம் 48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பரமக்குடி

    மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தெளிச்சாத்தநல்லூர் தொடக்கத்தில் உள்ள பாலம் 1974-ம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது வரை பயன் பாட்டில் இருந்து வருகிறது.

    குறுகிய பாலமாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் 4 சக்கர வாக னங்கள், இருசக்கர வாக னங்கள், பாதசாரிகள் நடந்து செல்லும்போது தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. பழமையான பாலம் என்பதால் மராமத்து செய்யப் படாமல் பழுதடைந்துள்ளது.

    இதனால் மதுரை -ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பாலத்தை கடந்து தான் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    பாலம் கட்டிய நாள் முதல் இன்றுவரை சம்மந்தப்பட்ட துறை மூலம் எவ்வித பராமரிப்பு பணியும் நடைபெறாமல் இருப்பதால் பாலம் முழுமை யாக சேதமடைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாலத்தை சுற்றிலும் செடிகள் முளைத்தும், ஆங்காங்கே சிமெண்டு கற்கள் உடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் பொதுமக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் விபரீதம் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

    48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×