என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரூ. 22½ லட்சம் மதிப்பில் மின்கல இயக்க வாகனங்கள்
  X

  ராமநாதபுரம் நகராட்சி திடக்கழிவு பணிக்கு மின்கல இயக்க வாகனங்களை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். அருகில் காதர்பாட்ஷா முத்துராாமலிங்கம் எம்.எல்.ஏ., நகர்மன்றத்தலைவர் கார்மேகம் உள்ளிட்ட பலர் உள்ளனர். 

  ரூ. 22½ லட்சம் மதிப்பில் மின்கல இயக்க வாகனங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதபுரம் நகராட்சிக்கு ரூ. 22½ லட்சம் மதிப்பில் மின்கல இயக்க வாகனங்களை கலெக்டர் வழங்கினார்.
  • பசுமையான ராமநாதபுரத்தை மாற்ற உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும் என்று விழாவில் பேசினார்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக வழங்கப்பட்ட மின்கல இயக்க வாகனங்களை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் நடந்தது.

  அப்போது கலெக்டர் பேசியதாவது:-

  ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் உருவாக்கப்பட வேண்டும். அதனை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடவு செய்திட வேண்டும் என்கிற நோக்கத்திலும் மேலும் இதற்கான அனைத்து நகராட்சிகளுக்கும் இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  பசுமையான ராமநாதபுரத்தை மாற்ற உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். மாசு இல்லாத ராமநாதபுரத்தை உருவாக்குவது இன்றியமையாததாகும். தூய்மைப் பணிகள் மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றை மேலும் சிறப்பாக மேற்கொண்டு ராமநாதபுரம் நகரினை தூய்மையான நகராட்சியாகவும் மற்ற நகராட்சிகளுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்கிடும் வகையில் செயலாற்ற வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசி னார்.

  அதனைத் தொடர்ந்து ஐ, சி.ஐ.சி.ஐ. பவுண்டேஷன் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் தலா ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 5 மின்கல இயக்க வாகனங்களை (மொத்தம் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில்) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கினார். வாகனங்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் வாகனங்களை ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்ப டைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், நகர் மன்றத்துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையர் (பொ) லெட்சுமணன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×