என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் ரூ10.50லட்சம் மோசடி: 7 பேர் மீது வழக்கு
- ஏல நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித்தருவதாக கூறி பெண்ணிடம் ரூ10.50 லட்சம் மோசடி.
- 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கண்ணன். இவரது மனைவி மீரா லட்சுமி (வயது26). இவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் மனைவி வளர்மதி.
அவர், தனியார் நகை அடகு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், அங்கு ஏலம் விடப்படும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதனை நம்பிய மீரா லட்சுமி, தனது வீட்டில் வைத்திருந்த இருந்த பணம் மற்றும் வங்கி மூலம் என மொத்தம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் வளர்மதி நகை வழங்கவில்லை. இதையடுத்து தனது பணத்தை மீராலட்சுமி திருப்பி கேட்டிருக்கிறார்.
ஆனால் அவர் பணத்தை திருப்பி தரவில்லை. மேலும்பொது இடத்தில் வைத்து அசிங்கமாக பேசி, நகையோ பணமோ கேட்டால் அடித்து கொலை செய்து விடுவதாக மீராலட்சுமிைய மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக வளர்மதி, பாலமுருகன், முத்து, பகவதி, சண்முகவள்ளி, கோபிநாத், காயத்ரி மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 7 பேர் மீது ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுவிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வளர்மதி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






