search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்ததான முகாம்-மரக்கன்று வழங்கும் விழா
    X

    ரத்ததான முகாம்-மரக்கன்று வழங்கும் விழா

    • இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ரத்ததான முகாம்-மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இந்திய எல்லையை காத்த மாவீரன் ஹவில்தார் பழனியின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம், மரக்கன்று வழங்கும் விழா கழுகூரணி கிராமத்தில் நடந்தது. இந்தியன் ரெட் கிராஸ் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.

    வீர மரணம் அடைந்த ஹவில்தார் பழனி உருவ படத்திற்கு அவரது மனைவி வானதி தேவி, அவரது குழந்தைகள் பிரசன்னா, திவ்யா, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து ரத்ததான முகாம், மரக்கன்றுகள் வழங்குதல், மரம் நடுதல் என பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. இந்த அனைத்து நிகழ்வுகளையும் ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரமேஷ், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், இணை அமைப்பாளர் ஆனந்த் மற்றும் வள்ளுவன் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரத்தில் அவரின் வீரத்தினையும், தேச பற்றினையும் நினைவு கூறும் வகையில் நினைவு மண்டபம் அல்லது நினைவு ஸ்தூபியினை இந்த மூன்றாவது ஆண்டிலாவது தமிழக அரசு கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×