என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாவட்ட அளவிலான போட்டிக்கு பரமக்குடி பள்ளி தேர்வு
  X

  மாவட்ட அளவிலான போட்டிக்கு பரமக்குடி பள்ளி தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாவட்ட அளவிலான போட்டிக்கு பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • எறிபந்து, இறகுபந்து, டெனிகாய்ட், பூப்பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.

  பரமக்குடி


  பரமக்குடி வட்டார அளவிலான குழு மற்றும் தனித்திறன் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் 38 பள்ளிகளைச் சேர்ந்த 1,200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தனித்திறன் போட்டிகளில் தட்டெறிதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், கம்பு ஊண்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய தனித்திறன் போட்டிகளிலும் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கான எறிபந்து, இறகுபந்து, டெனிகாய்ட், பூப்பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.

  இந்த மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் கீழமுஸ்லிம் ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாகத்அலி, தாளாளர் ஜாஜஹான், தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

  Next Story
  ×