search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாழ்வான பகுதிகளில் மக்கள் வசித்துவரும் கிராமங்களில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    ராமநாதபுரம் மாவட்டம் கல்பார் மீனவ கிராமத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு மேற்கொண்ட காட்சி. அருகில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    தாழ்வான பகுதிகளில் மக்கள் வசித்துவரும் கிராமங்களில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • கடற்கரையையொட்டி தாழ்வான பகுதிகளில் மக்கள் வசித்துவரும் கிராமங்களில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • அவர்களுக்கான அரசு நிவாரணத் தொகை ரூ.5000 மற்றும் 10 கிலோ அரிசி, சேலை ஆகிய வற்றை அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் கடற் கரையையொட்டி உள்ள தாழ்வான பகுதிகளில் மக்கள் வசித்து வரும் கிராமங்களுக்கு சென்று மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன் முன்னிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை செயலரும், மாவட்ட கண்கா ணிப்பு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி பேரி டர் காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி பாதுகாத்திடும் வகையில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், இந்திரா நகர், குருவிக்காரன் தெரு வில் சுமார் 50-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பகுதியை பார்வை யிட்டு அந்த குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் வாய்க் கால் சீரமைப்பதுடன் அவர் களுக்கு தேவையான குடிநீர் மற்றும் மருத்துவவசதி வழங் குவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டு மென தெரிவித்தார்.

    பின்னர் கீழக்கரை வட் டம், சடையன்முனியன் வலசை ஊராட்சிக்கு சென்று இப்பகுதி கடற்கரை யையொட்டி மிக அருகாமை யில் உள்ளதாலும், மேலும் தாழ்வான பகுதியாக உள்ள தால் பேரிடர் காலங்களில் தண்ணீர் தேங்கும் பொழுது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கிடும் வகையில் மேற் கொள்ளப்பட்டுள்ள பணி களை கேட்டறிந்தார்.

    பின்னர் அருகாமையில் உள்ள கல்பார் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத் திற்கு சென்று பார்வையிட்டு அங்கு 1000 பேர் தங்கும் அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதை ஆய்வு செய்தார். இதேபோல் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் தயார் நிலையில் வைத் திருக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து பனைக்குளம் ஊராட்சியில் தொடர் மழை யால் வள்ளி என்பவரது வீடு முழுமையாக பாதிக்கப் பட்டதையொட்டி அவர்க ளுக்கான அரசு நிவாரணத் தொகை ரூ.5000 மற்றும் 10 கிலோ அரிசி, சேலை ஆகிய வற்றை அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ராமநாத புரம் வருவாய் கோட்டாட் சியர் கோபு, கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ் வரி மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×