search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி திட்டம்
    X

    நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி திட்டம்

    • நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.
    • காவல் கண்காணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை காவல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    சட்டசபையில் அறிவித்த படி "நடப்போம் நலம் பெறுவோம்" எனும் திட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் அறி விக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபா தைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பெறுவதற்கான நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் நாளை 4-ந் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும் நடைபயிற்சி முடிவில் சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற வுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை நடத்தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்திற்காக 8 கி.மீட்டர் தூர சாலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்துவமனை, அம்மா பூங்கா, வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், காவல் கண்காணிப்பாளர் முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை, புதிய சோதனை சாவடி, காவல் கண்காணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை காவல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடைபயிற்சியில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக குடிநீர், ஓய்வு நாற்காலிகள், வழிகாட்டி பலகைகள், நடைபயிற்சி நன்மைகள் குறித்த பதா கைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் தொடக்க விழா நாளை (4-ந்தேதி) சனிக்கிழமை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

    கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்குகிறார். நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    Next Story
    ×