மாநில சிலம்ப போட்டியில் கமுதி மாணவர்கள் முதலிடம்

மாநில சிலம்ப போட்டியில் கமுதி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். மதுரையில் மாடக்குளம் கலிங்க வஸ்தாத் 7-ம் தலைமுறை பாரம்பரிய சிலம்ப தேக பயிற்சி பள்ளி சார்பில் நடந்தது.
மாநில சிலம்ப போட்டியில் கமுதி மாணவர்கள் முதலிடம்
Published on: 

பசும்பொன்

மதுரையில் மாடக்குளம் கலிங்க வஸ்தாத் 7-ம் தலைமுறை பாரம்பரிய சிலம்ப தேக பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தென்னாட்டு போர்க் கலைச் சிலம்பம் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள், பயிற்சியாளர் சரத்குமார் தலைமையில் பங்கேற்றனர். தனித்திறன் போட்டியில் 6 மாணவர்கள் முதலிடமும், 2 மாணவர்கள் 2-ம் இடமும், 5 மாணவர்கள் 3-ம் இடமும் பெற்றனர். இரட்டைக் கம்பு பிரிவில் 2 மாணவர்கள் முதலிடமும், 2 மாணவர்கள் 2-ம் இடமும் பெற்றனர்.

X