என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீனவர் வீட்டில் நகை-மோட்டார் சைக்கிள் திருட்டு
- தொண்டி அருகே மீனவர் வீட்டில் 8 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
- இது தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடலோர கிராமமான சோழியக்குடி எம்.வி பட்டிணத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 50).
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த 8 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடினர். தொடர்ந்து வீட்டில் இருந்த சாவியை எடுத்து வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து தொண்டி போலீசில் சுப்ரமணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கொள்ளையர்களின் கைரேகைகள் தடயவியல் நிபுணர்களால் சேகரிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story






