என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனியனூரில் இறந்த மாணவிக்கு இஸ்லாமியா பள்ளியில் அஞ்சலி
    X

    கனியனூரில் இறந்த மாணவிக்கு இஸ்லாமியா பள்ளியில் அஞ்சலி

    • கனியனூரில் இறந்த மாணவிக்கு இஸ்லாமியா பள்ளியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    கீழக்கரை

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியனூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதைத்தொடர்ந்து அங்கு விரும்பத்தகாத செயல்கள் நடந்தன. கள்ளக்குறிச்சியில் இறந்த மாணவி ஸ்ரீமதிக்கு கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமையில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது பள்ளி தாளாளர் பேசுகையில், மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் போதிய பாதுகாப்பு உள்ளதா? என்பதை அனைத்து ஆசிரியர்களும் 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×