என் மலர்
உள்ளூர் செய்திகள்

இடைத்தரகர்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம்
- இடைத்தரகர்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
- விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க உள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் முதற்கட்டமாக 50 மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் தொடங்கப்பட்ட ஒரு வார காலத்தில் இதுவரை 759 மெட்ரிக்டன் நெல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டு ள்ளது.
இதுவரை 126 விவசாயிகள் நேரடியாக அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெற்று உள்ளனர். இதேபோல் மற்ற விவசாயிகளும் விளைநிலத்தில் விளைந்த நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து உரிய லாபத்தை பெற்று பயன்பெற வேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
அரசு நேரடி கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கா கவே செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் விவசாயிகள் நேரடியாக வந்து நெல் விற்பனை செய்து அதற்குறிய பணத்தை வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொண்டு செல்லலாம்.
கொள்முதல் நிலை யத்தில் எந்த வகை கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.