search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வறட்சி பாதித்த பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஆய்வு
    X

    வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் இயக்குநர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வறட்சி பாதித்த பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஆய்வு

    • முதுகுளத்தூர், கடலாடியில் வறட்சி பாதித்த பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஆய்வு செய்தனர்.
    • பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி மானாவாரியாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதிகளில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நடப்பாண்டில் இந்த பகுதிகளில் சுமார் 95 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி மானாவாரியாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய மழை போதிய அளவில் பெய்யாததால் வளர்ச்சி நிலை, தூர் பிடிக்கும் பருவம் மற்றும் பூக்கும் பருவம் என பல்வேறு நிலைகளில் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    கண்மாய்களில் போதிய அளவு நீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் நீர்பாசன வசதியுள்ள பகுதிகளிலும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதிகளில் பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்பட்டது.

    சில பகுதிகளில் பயிர்கள் ஆரம்பகட்ட வளர்ச்சிக்குப்பின் மணி பிடித்த நிலையில் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக மணிகள் பதராக மாறி மகசூல் முற்றிலுமாக பாதிக்க ப்பட்டது.

    பாதிக்க ப்பட்ட விவசாயி களின் தொடர் கோரி க்கைக்கு பிறகு தற்போது வருவாய் த்துறை மற்றும் வேளா ண்மைத் துறைகளின் மூலம் வறட்சி பாதிப்புகள் குறித்த கண க்கெடுப்பு நடந்து வருகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்ய சென்னை யில் இருந்து வந்த வேளாண்மை இயக்குநர் அண்ணா துரை, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூலுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கடலாடி வட்டாரம் ஏனாதி, முதுகுளத்தூர் வட்டாரம் தேரிருவேலி ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    சாகுபடி செய்யப்பட்ட பரப்பு, பாதிக்கப்பட்ட பரப்பு, பயிர் காப்பீடு செய்யப்பட்ட பரப்பு, பாதிப்பு விவரங்களை கணக்கெடுக்கும் பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வறட்சி பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை சாகு படிக்கு கொண்டு வரும் சிறப்புத் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயன சர்மா உடனிருந்தார். ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சரசுவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, செயற்பொறியாளர் சங்கர் ராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) செல்வம் மற்றும் முதுகுளத்தூர், கடலாடி வட்டார வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×