search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க கோரிக்கை
    X

    இணைப்பு விழாவில் பங்கேற்றவர்கள்

    தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க கோரிக்கை

    • தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
    • மேற்கு பள்ளி ஜமாத் தலைவர் நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தை வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளையுடன் இணைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிறுவனர் பாரீஸ் தலைமை தாங்கினார். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் செயல் தலைவர் உஸ்மான்கான், பொதுச்செயலாளர் கண்ணன், மாநில துணை செயலாளர் நூருல்லா, மாநில ஊடகப்பிரிவு அப்துல் ரஹ்மான், குவைத் மண்டல செயலாளர் முபாரஹ் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுச்செ யலாளர் ஜெயந்தன் வரவேற்றார். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி நல வாரியம் அமைத்து தந்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. உக்ரைன் போரால் மருத்துவக்கல்வி பாதிக்கப்பட்டு திரும்பிய இந்திய, தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு தொடர்ந்து மருத்துவ கல்வி கிடைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வளைகுடா நாடுகளில் சிறு, சிறு குற்றங்களுக்காக சிறையில் வாடும் அப்பாவி தமிழர்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், தமிழகத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு மீன்பிடி தொழிலுக்குச் செல்லும் மீனவர்களின் பணிப்பாதுகாப்பு, காப்பீட்டு தொகை கிடைக்க, அதை உறுதிசெய்ய தமிழக அரசைக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வெளிநாடுகளில் வேலைக்கு சென்று அங்கு எதிர்பாராத விதமாக உயிர் இழந்தவர்களது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்படும் சிரமங்களை எளிதாக்க வேண்டும், உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவி செய்து வரும் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வெளிநாடு செல்பவர்கள் போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றம் அடைவதைத் தடுக்க அரசே வெளிநாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு செல்லும் முன்பு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தில் முறையாக பதிவு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மாவட்ட செயலாளர் ஹபீப் முகமது, ஊடக பிரிவு அசாருதீன், சமூக ஆர்வலர் ஒடுவன்பட்டி சத்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.மேற்கு பள்ளி ஜமாத் தலைவர் நன்றி கூறினார்.

    Next Story
    ×